தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த வாத்திய இசை குழு, ஹைதராபாத் நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான போலீஸ் வாத்திய இசை குழு போட்டியில் இந்திய அளவில் 2ஆம் இடம் பிடித்து மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
இந்த போட்டியில் 33 மாநிலங்களைச் சேர்ந்த போலீஸ் வாத்திய இசை குழுக்கள் பங்கேற்ற நிலையில், தமிழ்நாடு போலீஸ் அணி தங்களது ஒழுக்கம், ஒருங்கிணைப்பு மற்றும் உயர்தர இசை திறமையின் மூலம் நீதிபதிகளின் பாராட்டைப் பெற்றது.
இந்த சாதனையில், கோவை மாநகரம் சரவணம்பட்டி காவல் நிலையத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர், கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலையத்தைச் சேர்ந்த வினோத் மெர்குரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீஸ் வீரர்கள் ஒன்றிணைந்து சிறப்பான இசை நிகழ்ச்சியை வழங்கினர்.
தேசிய அளவில் இரண்டாம் இடத்தை கைப்பற்றிய இந்த வெற்றி, தமிழ்நாடு காவல்துறையின் கலை மற்றும் பண்பாட்டு திறன்களை தேசிய மேடையில் வெளிப்படுத்திய பெருமைமிக்க சாதனை என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
